நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக நுழைவோரை தடுக்க புதிய சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது பிரான்ஸ்!
 Friday, December 22nd, 2023
        
                    Friday, December 22nd, 2023
            
தமது நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக நுழைவோரை தடுக்க கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் புதிய சட்டமூலமொன்றை பிரான்ஸ் உருவாக்கியுள்ளது.
இந்த சட்டமூலத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான், அந்நாட்டின் ரெனய்ஸான்ஸ் கட்சி (Renaissance party) மற்றும் எதிர்கட்சி தலைவரும் தீவிர வலதுசாரி சிந்தனையாளருமான மரின் லெ பென் (Marine Le Pen) சார்ந்த நேஷனல் ரேலி (National Rally) ஆகிய இரு கட்சிகளுமே ஒருமித்து ஏற்றுக்கொண்டுள்ளன.
பல ஆண்டுகளாக அல்ஜீரியா, மொராக்கோ, போர்த்துகல், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக தரைவழியாகவும், கடல் வழியாகவும் நீண்ட தூர ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மக்கள் உள்ளே நுழைவது தொடர்கதையாகி வருகிறது.
சமீப சில வருடங்களாக பிரான்ஸில் இவ்வாறு உள்ளே நுழையும் அகதிகளால் பல்வேறு உள்நாட்டு சிக்கல்கள் எழுந்துள்ளதாக பிரான்ஸ் தரப்பில் முறைப்பாடுகள் வெளிவந்தன
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் அகதிகள் குறித்த புலம் பெயர்வோர் சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் சட்டமூலத்தை பிரான்ஸ் வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளது. மேக்ரானின் கட்சிக்குள் சட்டமூலத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        