ஏவுகணை பரிசோதனைகளுக்கு தயாராகும் வடகொரியா!

Tuesday, September 5th, 2017

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உட்பட மேலும் பல ஏவுகணை பரிசோதனைகளை வட கொரியா மேற்கொள்ளவதற்கு தயாராகி வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தயாரிப்பான தாட் ரக ஏவுகணை பாதுகாப்பு முறைமை குறித்து வடகொரியா அதிக கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வடகொரியாவின் சோதனை செயல்பாட்டை அடுத்து தென் கொரியாவும் இராணுவ பயிற்சி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது

இதேவேளை, தமக்கோ அல்லது தம்முடன் இணைந்து செயல்படும் நட்பு நாடுகளுக்கோ, வட கொரியா ஏவுகணை அச்சுறுத்தலை விடுக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையுடன் பொருத்தக்கூடிய ஹயிட்ரஜன் குண்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக வட கொரியா குறிப்பிட்டுள்ளது

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கை மற்றும் வல்லரசுகளின் எச்சரிக்கை போன்றவற்றை உதாசீனம் செய்து வரும் வட கொரியா, தொடர்ந்தும் அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

Related posts: