நச்சுக் காற்று காரணமாக கண்கள், மூக்குகளில் இரத்தக் கசிவு!

Tuesday, February 5th, 2019

தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக்கில் பரவி வரும் நச்சுக்காற்று காரணமாக மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாங்கொக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணம் என கூறப்படுகிறது.

தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்று வீசி வருவதாக அந்நாட்டின் காற்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஏர்விஷ்வல்ஸ் நிறுவனம் கடந்த வாரம் நடத்திய ஆய்வில், உலக அளவில் காற்று மாசுபாடு நிறைந்த நாடுகளில் பாங்காக் 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: