தொழுகை நடத்த தடை!

Saturday, July 22nd, 2017

இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேம் புனித தளத்தில் தொழுகையில் ஈடுப்பட 50 வயதிற்கு குறைவான இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெரூசலேம் நகரில் உள்ள புனித தளத்தில் யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என இருதரப்பினரும் ஒன்றாக தொழுகை நடத்தி வந்துள்ளனர்.

கடந்த வாரம் புனித தளத்தில் பொலிசார் மீது பாலஸ்தீனர்கள் நடத்திய தாக்குதலில் 3 பொலிசார் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து புனித தளத்தில் தொழுகை நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை பொலிசார் விதித்தனர்.இதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை தினத்தன்று நடத்தப்படும் தொழுகையின்போது 50 வயதிற்கு கீழ் உள்ள இஸ்லாமியர்கள் கோவிலுக்குள் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரின் இந்நடவடிக்கையை இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக கண்டித்து இன்று மாபெரும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.‘யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் ஜெருசலேம் பொலிசார் பிரிவினையை தூண்டுகின்றனர். பொலிசார் விதித்த தடையை திரும்ப பெறும் வரையில் இப்போராட்டம் தொடரும்’ என இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களின் போராட்டத்தை தொடர்ந்து ஜெருசலேம் நகர் முழுவதும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: