தொழில் அனுமதி வீசா தொடர்பாக பிரித்தானியா ஆராய்ந்து வருகின்றது!
Wednesday, September 14th, 2016
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னர் அதன் பொருளாதாரத்திற்க சாதகமாக அமையக்கூடிய வகையில் தொழில் அனுமதிக்கான வீசா வழங்கும் நடைமுறையொன்றை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் அம்பர் ரூட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பொருளாதாரத்திற்கு சாதகமானதாகவே இந்த புதிய நடைமுறை அமையப்பெறும் என்றும் உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என பிரித்தானிய மக்கள் தீர்மானித்துள்ளதால் அந்தத் தீர்மானம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ள உள்துறை செயலாளர் அம்பர் ரூட் அப்போது பிரித்தானிய பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் சிக்காது முன்னெடுத்துச் செல்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் அரசு ஆராய்ந்த வருவதாகத் தெரிவிக்கின்றார்.
இதற்கமையவே பிரித்தானியாவுக்கு தொழிலாளர்கள் தேவைப்படும் போது தொழில் அனுதிக்கான வீசாவை வழங்கும் நடைமுறையைப் படுத்தி ஐரோப்பிய நாடுகளிலிருந்து தொழிலாளர்களை உள்வாங்கும் நடைமுறை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கட்டுக்கடங்காது குடியேறிகள் வந்ததால் தாம் வேலைவாய்ப்புக்களை இழந்துவிட்டதாக தெரிவித்தே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு பிரித்தானிய மக்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
அதேவேளை ஐரோப்பிய நாடுகளும் எதிர்காலத்தில் பிரித்தானியப் பிரஜைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் போது வீசா பெற வேண்டும் என்ற நடைமுறையை அமுலுக்கு கொண்டுவரும் என்றும் பிரித்தானிய உள்துறை செயலாளர் அம்பர் ரூட் தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


