தேம்ஸ் ஆற்றிலிருந்து மற்றொரு சடலம் மீட்பு!
Thursday, June 8th, 2017
இலண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலண்டன் தாக்குதலை தொடர்ந்து காணாமல் போன பிரான்ஸ் பிரஜை சேவியர் தோமஸை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பிரித்தானியாவின் தென் பகுதியிலுள்ள தேம்ஸ் ஆற்றிலிருந்து மற்றுமொரு சடலத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுத்துள்ளனர். அந்தவகையில் உயிரிழப்பு எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
எனினும், கண்டெடுக்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலண்டன் பிரிட்ஜ் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்திருந்ததுடன், 48 பேர்வரை படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வங்கதேசத்தில் நடந்த தாக்குதலில் 16 வெளிநாட்டவர் பலி!
முகத்திரை அணிந்தால் ரூ.14 லட்சம் அபராதம்!
இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரம்: விரைவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் - ட்ரம்ப்!
|
|
|


