தென் சீனக் கடல் பகுதியில் புதில் சட்டத்தை அமுல்படுத்தியது சீனா!

Sunday, June 16th, 2024

தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டமொன்ற அமல்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புதிய சட்ட விதிமுறைகளின்படி, எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் நிர்வாகத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர்களைத் தடுத்து வைக்க முடியும்.

அதன்படி, அவர்கள் 60 நாட்கள் வரை சீனக் கடலோரக் காவல்படையினரால் காவலில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின் பிராந்திய கடல் மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டுக் கப்பல்களும் தடுத்து வைக்கப்படலாம் எனவும் குறித்த புதிய சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பிலிப்பைன்ஸ், சீன கடலோர காவல் படையின் நடவடிக்கைகள் காட்டு மிராண்டித்தனமானது எனவும், மனிதாபிமானமற்றது எனவும் விமர்சித்துள்ளது.

தென் சீன கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்து வரும் சீனா, அந்த கடல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை அமைத்துள்ளது.

இதற்கு பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும், தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள் அத்துமீறி நுழைவதாக கூறி சீனா அடிக்கடி தாக்குதலும் நடத்தி வருகிறது. இந்த நிலையிலேயே தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: