தென் சீனக் கடற்பரப்பில் ரோந்து பணியில் சீன விமானங்கள்!
Sunday, August 7th, 2016
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலிலுள்ள தீவுகளின் வான்பரப்பில் போர் மற்றும் குண்டு தாக்குதல் நடத்தும் விமானங்களை ரோந்து பணிக்கு சீனா அனுப்பியுள்ளது.
இந்த கடற்பரப்பில் பெரும்பாலான பகுதிகளில் சீனா உரிமை கொண்டாடுவதற்கான அடிப்படைகள் எதுவும் இல்லை என சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் தெரிவித்த பிறகு, கடந்த மாதம் தான் இந்த பகுதியில் ஒழுங்கான வான்வழி ரோந்து பணியை சீனா தொடங்கியிருக்கிறது.
இதை தவிர, கிழக்கு சீனக் கடற்பரப்பிற்கு மிகவும் நெருக்கமாக, பெரும்பாலான மீன்பிடி படகுகளோடு 230 கப்பல்கள் அடங்கிய சீனக் கப்பல் அணியை சீனா அனுப்பியிருப்பதாகவும் ஜப்பான் தெரிவித்திருக்கிறதுசீனாவின் கடற்பரப்பின் இறையாண்மை கோரிக்கையில் உறுதியாக இருப்பதை இந்த இரண்டு தகவல்களும் காட்டுகின்றன.
Related posts:
நைஜீரியாவில் குண்டுதாரிகள் பலி!
எதியோப்பிய அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய தலைவரானார்!
ஹொங்காங் போராட்டம்: தலைமை தாங்கியவர் கைது!
|
|
|


