தென் கொரியாவை சாம்பலாக்குவோம்: வட கொரியா
Saturday, March 26th, 2016
வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தலைத் தொடர்ந்து தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய எல்லைப் பகுதிகளில் கடந்த மார்ச் 7- ஆம் திகதி முதல் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, எதிரி நாடுகள் எங்களுக்கு சவால் விடுக்கின்றன.
அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். போர் மூண்டால் தென்கொரியா தலைநகர் சியோல் உட்பட அந்த நாடு முழுவதையும் எரித்து சாம்ப லாக்குவோம்.
தற்காப்புக்காக வடகொரிய ராணுவமும் தற்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளை யும் சோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
Related posts:
4 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொண்ற ஒரே ஒரு தோட்டா!
அதிகார மிடுக்கில் மிரட்டலாம்! ஆனால் அது பகற் கனவுதான் - வடகொரியா!
உலகை அச்சுறுத்தும் உக்ரைன் - ரஷ்ய யுத்தத்துக்கு ராஜதந்திர வழிமுறைகளிலேயே தீர்வைத்தரும் - கனடிய வெளி...
|
|
|


