தென் ஆபிரிக்காவில் புயல் காற்று: எட்டுபேர் உயிரிழப்பு!
Friday, June 9th, 2017
தென் ஆபிரிக்க நகரான கேப் டவுனில் கடந்த இரு தினங்களாக வீசிய புயல் காற்று காரணமாக எட்டுபேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி புயல் காற்று காரணமாக சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யும் என்றும் கடல் அலைகள் எழுச்சி பெறும் என்றும் தென்னாபிரிக்க வானிலை சேவைகள் மையம் எதிர்வுகூறியுள்ளது.இதேவேளை, கேப் டவுன் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மின்னல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் நால்வரும் மற்றுமொரு தீ விபத்தில் மூவரும், வீடு இடிந்து வீழ்ந்ததில் ஒருவரும் என எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காற்று பலமாக வீசுவதால் தீ வேகமாக பரவுவதாக தீயணைப்பு தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும் தீயை கட்டுப்படுத்துவதற்காக மேலதிகமாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீ பரவல் காரணமாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேப் டவுன் வறட்சி பேரழிவு பகுதியாக அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களில் மேற்படி புயல் காற்று மற்றுமொரு அழிவை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
|
|
|


