தென்கொரிய ராஜதந்திரியர்கள் குழு வடகொரியா விஜயம்!
Monday, March 5th, 2018
தென்கொரியாவை சேர்ந்த ராஜதந்திரியர்கள் குழு ஒன்று வடகொரியாவிற்கு செல்லவுள்ளதாக தென்கொரிய ஜனாதிபதி தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன்.
இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவினை சரிசெய்யும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்கா மற்றும் கொரிய அரச நிர்வாகிகளுக்கு விளக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இராஜதந்திர குழுவில் தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு செயலகம் என்பனவற்றை சேர்ந்த 10 பேர் உள்ளடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் பங்குகொள்ளும் Suhuoon எனும் ராஜதந்திரி, இரு கொரியாக்களுக்கும் இடையே, கடந்த 2000 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உச்சிமாநாட்டின் போது பங்குகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோன் யுன் இன் சகோதரியினால் விடுக்கபபட்ட அழைப்பிற்கு அமையவே, இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


