மூளைக்காய்ச்சலால் 450 பேர் பலி!

Wednesday, April 12th, 2017

நைஜீரியா நாட்டில் மூளைக்காய்ச்சல் நோயால் 450 பேர் பலியானதற்கு குடிமக்களிடம் கடவுள் மீதான பக்தி குறைந்தது தான் காரணம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாத தாக்குதல்களால் அப்பாவி குடிமக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

இந்த அச்சுறுத்தல் ஒருபுறமிருக்க சமீபத்தில் நைஜீரியாவில் பரவியுள்ள மூளைக்காய்ச்சல் வியாதிக்கு பலர் பலியாகி வருகின்றனர்.குறிப்பாக Zamfara மாகாணத்தில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உள்பட 450 பேர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில் மூளைக்காய்ச்சல் நோய் மற்றும் குடிமக்கள் பலியாவது தொடர்பாக மாகாண ஆளுநரான Abdulaziz Yari என்பவர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, மூளைக்காய்ச்சல் நோய் பரவுவதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் பொறுப்பு ஏற்காது, இதற்கு முழுக் காரணமும் குடிமக்கள் தான்.அதாவது கடவுள் மீது குடிமக்களுக்கு பக்தி குறைந்து விட்ட காரணத்தால் தான் இந்த நோய் பரவுகிறது, கடவுள் எதையும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டார்.எனவே குடிமக்கள் பலியாவதற்கு அவர்கள் தான் காரணமே தவிர அரசாங்கம் காரணம் இல்லை.

இனிவரும் நாட்களில் செய்த தவறுக்கு பரிகாரம் செய்துவிட்டு குடிமக்கள் கடவுளை தொடர்ந்து வழிப்பட்டு வந்தால் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். நோயை தடுத்து பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்தாமல் குடிமக்கள் மீது பழி சுமத்தும் ஆளுநரின் இப்பேச்சு நைஜீரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: