தென்கொரிய தூதரகத்தில் வட கொரியர் தஞ்சம் கோரியதாக பரபரப்பு!
 Friday, July 29th, 2016
        
                    Friday, July 29th, 2016
            
ஹாங்காங்கில் உள்ள தென்கொரிய தூதரகத்தில், வட கொரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தஞ்சம் கோரியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
தஞ்சம் கோரிய நபர், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக ஹாங்காங் வந்துள்ள 18 வயது இளைஞர் என்று பெரும்பாலான தகவல்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து உறுதி செய்ய தூதரக அதிகாரிகளும், போலிசாரும் மறுத்து விட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆயுதம் தாங்கிய சாதாரண உடையில் உள்ள அதிகாரிகள் தூதரகத்துக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என வெளிநாட்டுச் செய்திகள் கூறுகின்றன..
ஹாங்காங்கின் ராஜீய விவகாரங்கள் குறித்த அதிகாரங்களை வைத்துள்ள சீன அரசுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
முதல் வெளிநாட்டு பயணத்தில் ஜெர்மனி நாஜி முகாமை சந்திந்த மைக் பென்ஸ்!
அடிக்கு மேல் அடி வாங்கும் சசி அணி!
இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் - நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகிறது என வெளிவிவகா...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        