ஏவுகணையால் அச்சுறுத்தும் வடகொரியா:  ஜப்பான் தீவிர பயிற்சி

Thursday, July 20th, 2017

வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் கடும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள நிலையில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் விமான தற்காப்பு படையினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள விமான தளமொன்றில் குறித்த பயிற்சிகள் இடம்பெற்றிருந்தன.நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஜப்பான் இராணுவம் கடந்த ஜுன் மாதம் முதல் தமது பாதுகாப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மிக நீண்டதூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை வடகொரியா முதன்முறையாக இம்மாத ஆரம்பத்தில் வெற்றிகரமாக சோதனையிட்டு இருந்தது. குறித்த ஏவுகணை ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் வீழ்ந்ததாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் அமெரிக்காவின் முக்கிய நிலப்பகுதியை தாக்கும் வகையிலேயே வடகொரியாவின் குறித்த தாக்குதல் இடம்பெற்றிருந்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: