தென்கிழக்கு பிரான்ஸில் காட்டுத் தீ!

Thursday, July 27th, 2017

தென்கிழக்கு பிரான்ஸில் பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல தீயணைப்பு வீரர்கள் மும்முரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறான அதிக வெப்பம் மற்றும் அதிவேகக் காற்று போன்ற காரணங்களாலேயே குறித்த காட்டுத் தீ பரவியுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கோர்சிக்கா, கர்ரோஸ் மற்றும் நீஸ் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் இந்தக் காட்டுத் தீ பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களின் பொருட்டு மேற்குறித்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வேறு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த நிலைமையை கட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கை தொடரும் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related posts: