தூதரக உறவுகளை மீட்டெடுக்கும் வகையில் துருக்கி – எகிப்து இடையே தூதுவர்கள் நியமனம்!
Tuesday, July 4th, 2023
இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளை மிக உயர்ந்த இராஜதந்திர மட்டத்தில் மீட்டெடுக்க துருக்கியும் மற்றும் எகிப்தும் தூதுவர்களை நியமித்துள்ளன.
செவ்வாயன்று துருக்கிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கூட்டறிக்கையில், கெய்ரோவுக்கான தூதராக சாலிஹ் முட்லு சென் ஐ நியமித்ததாக அறிவித்துள்ளது.
மேலும் எகிப்து அம்ர் எல்ஹமாமியை அங்காராவுக்கான தூதராக நியமித்ததாகவும் கெய்ரோவும் அங்காராவும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் அதிகரிக்க இரு நாட்டு ஜனாதிபதிகளும் எடுத்த முடிவின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கப்பலுடன் படகு மோதி விபத்து!
வாக்குப் பெட்டிகளை கொள்ளையிட முயற்சித்தால் சுட்டு விடுங்கள்: பொலிஸாருக்கு மஹிந்த தேசப்பிரிய விசேட உத...
அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கு புதிய சட்டம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
|
|
|


