துருக்கி, சிரிய பேரவலம் – இதுவரை 11,000 பேர் உயிரிழப்பு – தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுப்பு!

Thursday, February 9th, 2023

தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏறக்குறைய ஒரு தசாப்தத்தில் துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் இதுவாகும்.

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட 7.8 மக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் தொடர்பில் துருக்கிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை பிரச்சினைக்குரியது என துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் நேற்று (08) ஒப்புக்கொண்டுள்ளார்.

அனர்த்த வலயத்தை பார்வையிட்ட ஜனாதிபதி எர்டோகன், மீட்பு பணிகள் தற்போது சாதாரணமாக நடந்து வருவதாக கூறினார்.

எவ்வாறாயினும், இந்த அனர்த்தத்துடன் எதிர்வரும் மே மாதம் தேர்தலை சந்திக்கவுள்ள எர்டோகன் தொடர்பில்

துருக்கி மக்கள் மத்தியில் விரக்தி அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், 2011 ஜப்பான் நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20,000 பேரைக் கொன்ற உயிரிழப்பு எண்ணிக்கையை நெருங்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: