துருக்கி குண்டுதாரியின் வயது 12 ?
Monday, August 22nd, 2016
கடந்த சனியன்று துருக்கியில் நடந்த கொடூர தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டு தாக்குதல்தாரி, 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.
குர்திய திருமண நிகழ்வில், குறைந்தது ஐம்பது பேரை பலிவாங்கிய இந்தத் தாக்குதலை, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு நடத்தியிருக்கலாம் என முன்னதாக தெரிவித்திருந்தார் ரிசெப் தாயிப் எர்துவான்.
இந்த வருடத்தில், துருக்கியில் நடைபெற்ற கொடூர தாக்குதல் இதுவே. அண்டை பகுதியான வடக்கு சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் சமீபத்தில் குர்திய போராளிகளிடம் நடந்த சண்டையில் தோற்றனர்; இந்த தாக்குதல் அதற்கான பழிவாங்கும் செயலாக கருதப்படுகிறது. காசியண்டெப்பில் பலியானவர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
Related posts:
ஜப்பானில் அதிகரித்து வரும் வயதானவர்களின் எண்ணிக்கை!
ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்படும் அபாயம்... !
மோசமான விளைவுகளை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் - எச்சரிக்கும் வடகொரியா!
|
|
|


