ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – அமெரிக்காவில் 03 பேர் உயிரிழப்பு!
Thursday, May 2nd, 2019
அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் தலைநகர் ஹோனாலுலுவில் 2 பெண் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கி தீப்பற்றி எரிந்தது.
இந்த கோர விபத்தில் விமானி உட்பட 03 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இதில் 02 பெண் சுற்றுலா பயணிகளில் ஒருவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
Related posts:
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் : 40 பேர் பலி!
விழுந்து நொறுங்கிய விமானம் - உடல் கருகி பலியான 22 பேர்!
உள்நாட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் - நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை!
|
|
|


