துருக்கி இராணுவப்புரட்சி தொடர்பில் மதத்தலைவருக்கு பிடியாணை!

இராணுவப்புரட்சிக்கு பின்னின்று செயற்பட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமரிக்காவை தளமாகக்கொண்ட துருக்கியின் மதத்தலைவருக்கு துருக்கியின் நீதிமன்றம் உத்தியோகபூர்வ பிடியாணையை பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை 15ஆம் திகதி இடம்பெற்ற இந்த புரட்சியின்போது சுமார் 270 பேர் பலியாகினர். இந்த நிலையில் நேற்று இஸ்தானாபுல் நீதிமன்றம் மதகுரு Fethullah Gulen க்கு பிடியாணையை பிறப்பித்துள்ளது. இவரே இந்த இராணுவப்புரட்சிக்கு உத்தரவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் தற்போது நாடு கடந்தவராக அமரிக்காவில் வசித்துவருகிறார்.
அத்துடன் இராணுவப்புரட்சி தொடர்பில் தமக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மெக்ஸிக்கோ நோக்கி நகரும் நியூட்டன் !
263 பயணிகளுடன் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம் – வெளியானது அதிர்ச்சித் தகவல்!
கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்தை தாண்டியது!
|
|