துருக்கியில் கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!
Monday, February 11th, 2019
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.
கட்டிட விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Related posts:
உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்!
பிரிக்ஸ் சர்வதேச மாநாடு ஒத்திவைக்கப்பட்டது - பிரிக்ஸ் சர்வதேச மாநாடு - உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விட...
ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டிற்கு இருக்கும் ஆணு ஆலை - ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
|
|
|


