துப்பாக்கிச் சூடு; மெக்சிகோவில் 8 பேர் பலி!

Wednesday, February 5th, 2020

மெக்சிகோவில் உள்ள ஸ்லாட் மிஷன் அரங்கத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் மிக்லோகன் மாநிலம் மேக்டெலினா மாவட்டத்தில் உள்ள ஸ்லாட் மிஷின் அரங்கம் அமைந்துள்ள பகுதிக்குள் இன்று நுழைந்த மர்ம நபர் அங்கு இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினான்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடிவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: