சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு!
Thursday, December 8th, 2016
முன்னாள் தமிழக முதமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு சென்னை 14-வது சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஓவ்வொரு வருடமும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா இந்த வருடம் மார்கழி மாதம் 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் உலகின் பல மொழிகளை சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு இந்த சர்வதேச திரைப்பட விழா (CIFF)எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
லிபியா புகைப்படக்கலைஞர் சுட்டுக்கொலை!
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் நடவடிக்கை ஆரம்பம்!
தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியது இந்தோனேசிய தம்பதியர்!
|
|
|


