தீவிரவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை பாகிஸ்தான் நிறுத்தவேண்டும் – அமெரிக்க ஜனாதிபதி!
Monday, August 7th, 2017
அயல் நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நடவடிக்கைகளினை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக அவரின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் இது தொடர்பான கொள்கைகளை மாற்ற வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜென்ரல் எச் ஆர் மெக்மாஸ்டர் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் தமது கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளினை கட்டுப்படுத்துவதில் இலகுவாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்
தடைசெய்யப்பட்ட தாலிபான்கள் போன்ற அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதன் மூலம் பிராந்தியத்தின் ஸ்திரி தன்மையை பேண முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
ரஷ்யாவில் போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் படுகொலை
இந்தியா- அமெரிக்கா இடையே இராணுவ ஒப்பந்தம்!
வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பாக்தாத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டன!
|
|
|


