பாகிஸ்தான் எல்லையில் இந்தியா அதிரடி: 20 தீவிரவாதிகள் பலி!

Thursday, September 22nd, 2016

 

உரி தாக்குதலில் உயிரிழந்த 18 இந்திய ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவை குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஏற்றுக் கொண்டுள்ளார்.இதற்கிடையே எல்லைத் தாண்டி இந்தியா தாக்குதலைத் தொடங்கியுள்ளது. அதில், 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ முகாமில் கடந்த 18ம் தேதி தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலியான ராணுவ வீரர்களின் தக்க மரியாதையுடன் நடைபெற்றது. பலியான ராணுவ வீரர்கள் பலருக்கு பள்ளி செல்லும் வயதில் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் சவானி பலியான அத்தனை ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து மகேஷ் சவானி கூறுகையில், ” தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் இறந்து போனது எனது மனதை பாதித்திருந்தது. ராணுவ வீரர்கள் பலியானது தொடர்பான   தொலைக்காட்சி செய்திகளை தொடர்ந்து கவனித்து வந்தேன். அப்போது, தந்தையை இழந்த சிறுமி ஒருவர், ‘எனது தந்தை தன்னை எப்போதும் நன்றாக படிக்குமாறும் படித்து பெரிய ஆளாக வர வேண்டுமென்று அறிவுரை கூறியதாகவும் இனிமேல் எப்படி படிக்கப் போகிறேன் என அழுது கொண்டே கூறியதுஎனது மனதை உருக்கியது. அந்த தருணத்திலேயே இந்த தாக்குதலில் இறந்த அத்தனை வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். அது மட்டுமல்ல, அந்த குழந்தைகளுக்கு இலவச தங்குமிடம் ,உணவு வசதியும் அளிக்க முடிவு  செய்துள்ளோன். குழந்தைகள் விருப்பப்பட்டால், எனது பி.பி. சவானி சர்வதேச பள்ளியிலேயே கல்வி பெறலாம்என தெரிவித்துள்ளார். சமூகத்தின் ஈடுபாடுடன் செயல்படுவது சவானிக்கு புதிதல்ல. ஏற்கனவே இவர் 472 பெண்களுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

 இதற்கிடையே உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் எல்லைத் தாண்டி சென்று தாக்குதலைத் தொடுத்துள்ளனர். முதல் கட்டத் தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200 தீவிரவாதிகள் காயத்துடன் தப்பி ஓடியுள்ளனர். இந்திய எல்லைக்குள் ஊடுறுவ முயன்ற தீவிரவாதிகளையும் ராணுவம் விரட்டியடிததுள்ளது

கடந்த செப்டம்பர் 20ம் தேதி இரவு ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து 20 இந்திய ராணுவ வீரர்கள் இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதையடுத்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் நாட்டின் வடக்குபுற  நகரங்களுக்கு சேவையை நிறுத்தி வைத்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை ஒட்டியுள்ள  பலுஸிஸ்தான் மாகாணத்தின்  கில்ஜித் மற்றும் ஹைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஸ்கர்து நகருக்கும் விமான சேவையை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளது

முதலில் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஜெய்ஷ் முகமது அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இப்போது தாக்குதல் நடத்தியவர்கள் லஷ்கர் தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்ட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை  பாகிஸ்தான் தூதரிடம் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் வழங்கியுள்ளார். இந்தியாவின் பதிலடி தொடுக்கத் தொடங்கியுள்ளதால், பாகிஸ்தான் இந்தியாவை பற்றி சர்வதேச நாடுகளிடம் போர் மிரட்டல் விடுப்பதாக குற்றச்சஞ்சாட்டி வருகிறது. அத்துடன் பாகிஸ்தான் படைகளையும் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே குவித்து வருகிறது.இன்னும் இதைப்பற்றிய அதிகாரப்பூர்வமான் தகவல்களை ராணுவமோ, மத்திய அரசோ வெளியிடவில்லை.

uri

Related posts: