16 ஆண்டுகளுக்கு முன்பே டிரம்ப் ஜனாதிபதி ஆவதை கணித்தது எப்படி?

Friday, November 11th, 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பிரபல கார்ட்டூன் தொடர் ’தி சிம்ப்சன்ஸ்’ டொனால்ட் டிரம்ப்பை ஜனாதிபதி என சித்தரித்து 16 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளது.

டொனால்ட் டிரம்ப்பை ஜனாதிபதி ஆவார் என்பதை சரியாக கணித்தது எப்படி என்பது பற்றி ’தி சிம்ப்சன்ஸ்’ கார்டூனின் எழுத்தாளர் Dan Greaney வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை. இது அனைத்தின் முடிவின் கடைசி ஒன்றாக தான் தெரிகிறது.

கற்பனை கதாபத்திரமான லிசாவுக்கு சில பிரச்சனைகள் இருந்தது. அதனை சரி செய்ய அவளுக்கு நேரம் தேவைப்பட்டது. இதனால் அவளுக்கு முன்பாக டிரம்பை ஜனாதிபதியாக சித்தரித்தோம் என்று கூறியுள்ளார்.

இந்த அத்தியாயத்தில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை பாழாக்கிய பிறகு லிசா அதை சரி செய்வதாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த கார்டூனின் நிர்வாக தயாரிப்பாளர் ஜேம்ஸ் எல் ப்ரூக்ஸ் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு அதிர்ச்சியாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts: