தீர்மானங்களுக்கு வடகொரியா மதிப்பளிக்க வேண்டும்: சீனா

Sunday, July 30th, 2017

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு வடகொரியா மதிப்பளிக்க வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. வடகொரியாவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தொடர்பில் இன்று (சனிக்கிழமை) சீன தொலைகாட்சியில் வெளியான  செய்தியிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கொரிய தீபகற்பத்தில் சர்ச்சையை கிளப்பும் விதத்திலோ அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையிலோ வடகொரியா ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் சீனா எச்சரித்துள்ளது.

மேலும், வடகொரியாவின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை மேன்மேலும் அதிகரிக்காத வண்ணம் ஏனைய உலக நாடுகள் நடந்துகொள்ள வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வடகொரியாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த செயற்பாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடத்தப்பட்ட ஏவுகணைச் சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனிப்பட்ட முறையில் கண்டுகளித்ததாகவும், வடகொரியாவை தாக்க முற்பட்டால் அமெரிக்கா அழிவிலிருந்து தப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: