திருச்சபை தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஆயர் கிரில் மறுப்பு!

Monday, June 20th, 2016

ரஷிய ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் தலைவரான முதுபெரும் ஆயர் கிரில், கிரீட் தீவில் நடைபெறும் சக திருச்சபை தலைவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விடுத்த கடைசிநேர வேண்டுகோளை மறுத்துள்ளார்.

பத்து ஆர்த்தோடாக்ஸ் திருச்சபைகளின் பிரதான தலைவர்கள் ஒன்றாக கூடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் மொத்த மக்களில் பாதிக்கும் குறைவான கிறிஸ்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஷிய ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை இந்த கூட்டத்தில் பங்குகொள்ள மறுத்திருக்கிறது.ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் நடைமுறை தலைவராக விளக்கும் இஸ்தான்புல்லில் இருக்கும் முதுபெரும் ஆயர் பார்த்தலோமேயு யுக்ரேன் கிளை திருச்சபைக்கு ஆதரவு வழங்கலாம் என்று ரஷியா அஞ்சுகிறது.

அவ்வாறு நிகழ்ந்தால், ஒரு மத கொந்தளிப்பை தூண்டலாம் என்றும்  செய்தித்தாள்  தெரிவித்திருக்கிறன.

Related posts: