திரிணாமுல் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் ராம்நாத் கோவிந்திற்கு திடீர் ஆதரவு

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பாரதிய ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு வழங்க போவதாக அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்ததில் எதிர்கட்சி வேட்பாளர் மீராகுமாருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில்இ குறித்து ஆறு பேரும் ராம்நாத் கோவிந்திற்கு வாக்களிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த 6 சட்டமன்ற உறுப்பினர்களும் திடீரென திரிபுரா மாநிலத்தில் கூட்டம் ஒன்றை கூட்டி இந்த முடிவினை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் குறிப்பிடுகையில்இ “ திரிபுராவில் தற்பொழுது கமியூனிஸ்ற் கட்சியின் ஆட்சி இடம்பெறுகின்றது. நாங்கள் கமியூனிஸ்ற்ரினை எதிர்த்து நின்று வெற்றி பெற்றவர்கள். அதனால் தற்பொழுது மீராகுமார் கம்யூனிஸ்ற் கட்சியை ஆதரிப்பதால் அவருக்கு நாங்கள் ஆதரவு வழங்க முடியாது. எனவே ராம்நாத் கோவிந்திற்கே வாக்களிக்கவுள்ளோம்.” என தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|