திடீர் திடீரென இறந்து விழும் பறவைகள்!

பறவை இனம் ஒன்று திடீரென மரத்தில் இருந்து விழுந்து இறந்து போவதாக அகுரஸ்ஸ மலிதுவ பங்கம பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தமது பிரதேசத்தில் மரக் கிளைகளில் பறக்கமுடியாமல் அமர்ந்து இருக்கும் இந்தப் பறவைகள் திடீரென கீழே விழுந்து இறப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பறவை இனத்துக்கு நோய் ஏற்பட்டு உயிரிழக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளி யிட்டுள்ளனர்.உயிரிழந்த பறவைகள் நீரில் விழுவதாலும், வயல்கீரை வகைகளை மக்கள் உண்பதாலும் தமக்கு நோய் ஏற்படலாம் என பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த பறவை இனம் திடீரென உயிரிழப்பது தொடர்பில் அறிய இதுவரை வனவிலங்கு அதிகார சபையின் எந்த அதிகாரிகளும் வரவில்லை எனவும் இப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Related posts:
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட புயலால் பல மில்லியன்கள் இழப்பு!
உக்ரைன் ஜனாதிபதி பயணித்த கார் விபத்துக்குள்ளானது - விசாரணைகள் தீவிரம்!
பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு உதவத் தயார் - ஐ.நாவில் தென்கொரியா அதிபர் அறிவிப்பு!
|
|