திடீரென தீப் பற்றி எரிந்த 26 மாடிக் கட்டடம் முற்றாக நாசம்!

பிரேசில், சாப் பாலொவ் நகரில் உள்ள 26 மாடிக் கட்டடம் ஒன்றில் பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டதால் கட்டடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த கட்டடம் தீப்பற்றிய பின்னர் உடைந்து விழும் திகில் காட்சிகள் சர்வதேச ஊடகங்களினால் வெளியாகி உள்ளன. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர்தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு அதிகாரிகள் 150 க்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கட்டடம் தீ விபத்து ஏற்பட்டு 90 நிமிடங்களுக்குள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாக பிரேசில் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
உலக நாடுகளில் அசுத்தக் காற்றை சுவாசிப்பதால் 90 வீதமான உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன!
கலிபோர்னியாவில் மீண்டும் நிலநடுக்கம்!
இம்ரான் கானுக்கு எதிராக வழக்கு!
|
|