திடீரென தீப்பற்றி எரிந்த இரசாயன ஆலை – 18 பேர் உடல்கருகிப் பலி – இந்தியாவில் துயரம்!
Tuesday, June 8th, 2021
இந்தியாவின், புனேயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.45 இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அனர்த்தத்தின்போது சுமார் 37 தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தீ பரவலின் பின்னர் பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் பணிகளையும் மீட்பு நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர்.
தொழிற்சாலையில் குளோரின் டை ஆக்சைட் பயன்படுத்திய விதத்தில் தவறு நேர்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் தீ விபத்துக்கான உறுதியான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
இந் நிலையில் இந்த பயங்கர தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


