சர்வதேச நீதிமன்றத்திலிருந்து ரஷ்யா விலகுமா?

Thursday, November 17th, 2016

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைவதற்கான நடைமுறையிலிருந்து ரஷியா தன்னை விலக்கிக்கொள்வுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டது என்றும் சுதந்திரமாக உருவாகவில்லை என்றும் , ஆக்கிரமிப்பை முதலில் ஜார்ஜியாதான் தொடங்கியது என்பதை பொருட்படுத்தாமல், நீதிமன்றம் தற்போது மேற்கொள்ளும் விசாரணையில், தாங்கள் மகிழ்ச்சியடையவில்லை எனவும்  ரஷியா தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு, க்ரைமியாவில் நடைபெற்ற நிகழ்வு ரஷியா மற்றும் யுக்ரைனிற்கு இடையே ஏற்பட்ட ஆயுத மோதல் என இந்த வாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விவரித்துள்ளது. எனவே அதனையடுத்து அத்தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

உறுப்பினராக இருப்பது தன்னார்வம் மற்றும் இறையாண்மையைச் சேர்ந்தது என சர்வதேச நீதிமன்றம் இதற்கு பதிலளித்துள்ளது.

_92472185_gettyimages-622128250

Related posts: