தாலிபன் வசம் வீழ்ந்த ஓம்னா மாவட்டம்!

Monday, September 5th, 2016

ஆஃப்கானிஸ்தானின் தென் கிழக்கில் உள்ள பக்டிகாவின் மையத்தில் உள்ள ஒரு மாவட்டத்தை தாலிபன்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஒம்னா மாவட்டத்திலிருந்து தங்களது படையினரை பின்விலகும் தந்திரோபாய முடிவவை எடுத்ததாகவும், மீண்டும் அப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே மாகாணத்தில், மற்றொரு மாவட்டமான ஜானி கெல்லை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஆஃப்கன் படையினர் ஏற்கனவே தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம், ஜானி கெல் மாவட்டத்தை தாலிபன் கைப்பற்றியிருந்தது.

பாகிஸ்தான் எல்லையில் இருப்பதால் பக்டிகா மாகாணம் கேந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த மாகாணத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஹக்கானி குழுவினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

தாலிபன் அமைப்பிற்கு நெருங்கிய கூட்டாளியாக ஹக்கானி செயல்படுகிறது.அங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைகளில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறித்த தகவல் இல்லை.

160313121953_afghan_taliban_fighters_listen_to_mullah_mohammed_rasool_unseen_the_newly-elected_leader_of_a_breakaway_faction_of_the_taliban_in_farah_province_afghanistan_640x360_ap_nocredit

Related posts: