தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வு !

தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் நேற்று (10) மாலை குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சீன நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 5.8 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
அதேநேரம் நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என சீன நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
தாய்வானில் கடந்த மாத ஆரம்பத்தில் 7.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதில் இருந்து இதுவரை 1,000 ற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரெக்சிற்: தொடர்பில் அவசரமான ஒப்பந்தத்துக்கு வேண்டுகோள்!
முகக் கவசம் அணியாமல் பயணிக்க அனுமதி வழங்கும் பேருந்து நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை!
இலங்கை எந்தவொரு நாட்டுக்கும் எதிரி நாடு அல்ல - எந்த நாட்டுடனும் இராஜதந்திர உடன்படிக்கைகளில் கைச்சாத்...
|
|