தாய்வானின் முதல் பெண் அதிபராக சாய் இங்க்-வென் பதவியேற்பு

தாய்வான் நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுள்ள சாய் இங்க்-வென், சீனாவுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார்.
அமைதியான மற்றும் உறுதியான தலைவராக கருதப்படும் சாய், கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கட்சியை வழிநடத்தி அமோக வெற்றி பெற செய்தார்.
தாய்வானை தனது நாட்டின் பிரிந்து போன மாகாணமாக கருதும் சீனாவிடமிருந்து விடுதலை பெற ஜனநாயக முற்போக்கு கட்சி முழு முனைப்புடன் செயல்படுகிறது.
தேவைப்பட்டால், பலப் பிரயோகம் மூலம் தாய்வானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என கடந்த காலங்களில், சீனா அச்சுறுத்தல் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதும், சீனாவின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் தாய்வான் தீவினை இலக்காக நோக்கி உள்ளன.
தன்னிடம் அதிகாரபூர்வ முத்திரை வழங்கப்படும் முன், 59 வயதாகும் சாய், தன் நாட்டு தேசிய கொடியின் முன்னர் அதிபர் பதவியேற்புக்கான உறுதிமொழி எடுத்து கொண்டார். அவரும், அதிபர் பதவியிலிருந்து விடுபடும் மா யிங்-ஜியோவும், அதிபர் மாளிகை முன்னர் திரைகளில் பதவியேற்பு நிகழ்ச்சியை காண கூடியுள்ள மக்களுக்கு கையசைத்து தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.
”தாய்வான் மக்கள் தங்கள் வாழ்க்கையின் வழிமுறையாக உள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை காக்க உறுதிபூண்டுள்ளனர்” என்று தனது அறிமுக உரையில் சாய் கூறினார்.
Related posts:
|
|