லெபனானில் பிராந்திய மோதல்களை தடுப்பதற்கு புதிய அதிபராக பதவியேற்ற மிஷெல் உறுதி!

Tuesday, November 1st, 2016

லெபனான் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள மிஷெல் ஆன், பிராந்தியத்தில் நடைபெற்று வரும் மோதல்கள் தனது நாட்டுக்குள் பரவாமல் தடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் அதிபராக பொறுப்பேற்றபின், முன்னாள் இராணுவ தளபதியான மிஷெல் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வாக்கெடுப்பானது இரு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய அரசியல் முட்டுக்கட்டை நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த காலத்தின் போது லெபனான் அதிபரின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. கிறித்தவ சமூகத்தை சேர்ந்த ஒரு மூத்த தலைவர் தான் மிஷெல் ஆன். ஆனால்,ஈரான் ஆதரவு பெற்ற ஷியா முஸ்லிம் அமைப்பான ஹெஸ்பொல்லாவின் ஆதரவை அவர் பெற்றுள்ளார்.

_92162661_352e8c22-e4e4-4233-8ee7-71c7a28b4c8b

Related posts: