தான்சானியாவில் வெள்ளப் பெருக்கு!
Tuesday, April 17th, 2018
தான்சானியாவின் தலைநகரமான டார் ஏஸ் சலாம் பகுதியில் கடந்த நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழையில் நகரில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் வீடுகளின்மேற்கூரையில் தங்கியுள்ளதாகவும் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மே மாதம் வரை கடும் மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


