தாக்குதலுக்குத் தயாராகுங்கள் – அமெரிக்கா உத்தரவு!
Sunday, October 22nd, 2017
வடகொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பான் கடற்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஏவுகணை எதிர்ப்பு கப்பல் ஒன்றுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘தோமாஹோக்’ ரக ஏவுகணையை வடகொரியா மீது செலுத்த தயார் நிலையில் இருக்குமாறு பெயர் குறிப்பிடப்படாத அக்கப்பலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் இந்த உத்தரவு காரணமாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் யுத்தம் எந்த நேரத்திலும் ஆரம்பமாகும் சூழல் தோன்றியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
துருக்கியில் குண்டு வெடிப்பு! 34 பேர் பலி!!
கிரைமியாவில் உக்ரைனின் ஒளிபரப்புகளைத் தடை செய்யவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!
தென் கொரிய அதிபர் மூன் ரஷ்யாவில்!
|
|
|


