தாக்குதலில் சிரியா அரசபடையினர் 40 பேர் பலி!
Saturday, July 23rd, 2016
அலெப்போ நகரில் குண்டு தாக்குதல் நடத்திய சிரிய கிளர்ச்சிக்காரர்கள் சுமார் 40 அரசு ஆதரவு சிப்பாய்கள் மற்றும் போராளிகளை கொன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
படையினர் பெருமளவு பயன்படுத்தும் கட்டடத்துக்குக் கீழே தோண்டப்பட்ட சுரங்கப் பாதைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக பிரிட்டன் ஆதரவு பெற்ற மனித உரிமைக்கான சிரிய அவதானிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் வியாழக்கிழமையன்று நடத்தப்பட்டது ஆனால் அதன் விளைவுகள் தற்போதுதான் தெளிவாகத் தெரியவந்துள்ளது. அலெப்போ நகர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நான் ஜனாதிபதியானால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து -டிரம்ப்
சிறுவர்கள் தடுப்பு முகாமில் வாழ்வது கவலைக்குரியது : மேற்கு ஆஸ்திரேலியா முதல்வர்!
நியூயோர்க் நகரில் கனமழை - பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிப்பு!
|
|
|


