தஜிகிஸ்தான் – சீனா எல்லையில் 7.2 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!

Thursday, February 23rd, 2023

தஜிகிஸ்தானில் மேற்கு சீன எல்லைக்கு அருகில் சுமார் 7.2 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீனா நிலநடுக்க வலையமைப்பு மையத்தை மேற்கோள் காட்டி சீன அரசு தொலைக்காட்சியான சிசிடீவி தெரிவித்துள்ளது.

இன்று காலை 8:37 க்கு (0037 GMT) 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் காஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளில் வலுவாக உணரப்பட்டுள்ளதாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், இதுவரை எந்த உயிரிழப்பு அல்லது சேதம் ஏற்படவில்லை என்று உள்ளூர் தகவல் அதிகாரிகளை மேற்கோள் காட்டி அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

கஷ்கரில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இயல்பாகவே உள்ளது என்று அரச ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

தெற்கு ஜின்ஜியாங் தொடரூந்து சேவை அக்சு முதல் கஷ்கர் வரையிலான பகுதியில் இயங்கும் பயணிகள் தொடரூந்துகளை நிறுத்துமாறு ஜின்ஜியாங் தொடர்ந்து சேவை தெரிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூர் அதிகாரிகள் பாலங்கள், சுரங்கங்கள் மற்றும் தொலைதொடர்பு கருவிகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நிலநடுக்க 6.8 மெக்னிடியூட் அளிவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெவ்வேறு நிறுவனங்களின் அளவீடுகள் பெரும்பாலும் வேறுபடுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: