நான் ஜனாதிபதியானால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து -டிரம்ப்

Thursday, March 24th, 2016
நான் அமெரிக்க அதிபரானால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.அ மெரிக்க அதிபர் தேர்தல் நவ. 8இல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பாளரை தேர்வு செய்யும் ‘பிரைமரி’ தேர்தல் தற்போது நடக்கிறது.குடியரசு கட்சியில் வேட்பாளர் போட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னணியில் உள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் அவர் நேற்று இஸ்ரேல் செயல் கமிட்டி மாநாட்டில் பேசியதாவது:
நான் அமெரிக்க அதிபரானால் முழுக்க முழுக்க இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக நடந்து கொள்வேன். அந்த நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வேன். ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளையும் முழுமையாக அழிப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Related posts: