தவறான வான்வழி தாக்குதல்: 17 பொது மக்கள் பலி!
Sunday, October 30th, 2016
சவுதி அரேபியாவின் தலைமையிலான கூட்டணிப் படையினர் டாயிஸ் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு நகரில் நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது 17 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
தவறுதலாக பல வீடுகள் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டோரில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.
ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி ஆதரவு அளிக்கின்ற அதிபர் அப்திராபு மன்சூர் ஹாதிக்கு விசுவாசமான படைப்பிரிவுகளுக்கும் இடையில் நடைபெறும் இந்த போரில் டாயிஸ் ஒரு கேந்தர முக்கியத்துவம் வாய்ந்த களமாகும்.சவுதி தலைமையிலான கூட்டணி படையினரின் விமானத் தாக்குதலால் பல பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related posts:
6000 கோடி கறுப்பு பணத்தை அரசிடம் ஒப்படைத்த வியாபாரி!
அவுஸ்திரேலியாவில் விமானவிபத்து: 5 பேர் உயிரிழப்பு!
குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு பிராணவாயுவை வழங்கச் சென்ற கடற்படை அதிகாரி பலி!
|
|
|


