தற்கொலை செய்ய எண்ணிய ஓட்டுநரால் 26 பேர் பலியான பேருந்து விபத்து!
Sunday, September 11th, 2016
கடந்த ஜூலை மாதம் 26 பேரை பலி வாங்கிய பேருந்து விபத்தானது, தற்கொலை செய்து கொள்ள எண்ணிய ஓட்டுநரால் நிகழ்ந்துள்ளது என்று தைவான் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த பேருந்தில் பயணம் செய்த அனைத்து சீனப் பயணிகளும் கொல்லப்பட்ட இந்த விபத்தானது, இயந்திரப் பழுதால் ஏற்பட்டதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால், அந்த ஓட்டுநர் மது அருந்தியிருந்தார் என்றும், தன்னைத் தானே அழித்து கொள்ள விரும்பினார் என்பதும் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
மோதுவதற்கு நெடுஞ்சாலையின் தடுப்பை நோக்கி பேருந்தை திருப்புவதற்கு முன்னர், எரிபொருளை உள்ளே ஊற்றிய அவர் தீப்பற்ற வைத்திருக்கிறார்.
இந்த விபத்தை ஏற்படுத்தும் வரை, தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று அவரை இறைஞ்சி கேட்டு கொள்வதை, குடும்பத்தினரின் தொலைபேசி குறுந்தகவல்களின் பதிவுகள் காட்டுகின்றன. மோசமான பாலியல் நடத்தை பற்றிய புலனாய்வில் அந்த ஓட்டுநர் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


