தமிழ் கலாச்சார மாதமாக தை மாதத்தை கனடா பிரகடனம்!
Wednesday, October 12th, 2016
ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடப் போவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கனடா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் (283) அமோக ஆதரவு அளித்தனர். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அனைவரது கை தட்டல்களுக்கு நடுவே இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியது.
எம்-24 என்று பெயரிடப்பட்ட இந்தத் தீர்மானத்தில், “வரும் 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கனடா சமுதாயத்துக்காக கனடா வாழ் தமிழர்கள் ஆற்றி வரும் பங்களிப்பையும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Related posts:
ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 28 பேர் பலி
ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பாகிஸ்தான் பஞ்சாப்பில் குறைந்தது 20 பெண்கள் பலியாகினர்!
இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் அமைதிப் பாலம் திறப்பு!
|
|
|


