பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்கு?

Sunday, May 7th, 2017

பிரான்ஸின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்கு பதிவுகள் சமீபத்தில் முடிவு பெற்றன.இந்த நிலையில், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரண்டாம் கட்ட வாக்களிப்பு இன்று (07) இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக தமிழீழ மக்கள் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

En marche கட்சியின் வேட்பாளர் இமானுவல் மக்றோனை எதிர்த்து தேசியமுன்னணியின் வேட்பாளர் மரின் லூப்பன் போட்டியிடுகின்றார்.

இந்த தேர்தலில் தெரிவாகும் வேட்பாளரை பொறுத்துதான் ஒன்றிணைந்த பிரான்ஸ் தேசமா? அல்லது பிரெஞ்சு மக்களுக்கு மட்டுமேயான தேர்ந்தெடுத்த பிரான்ஸ் தேசமா? என்பது முடிவுக்கு வந்துவிடும்.

பிரான்சு தேசத்தின் எதிர்கால நன்மை கருதி ,இனவாதக் கட்சி வேட்பாளரான மரின் லூ பெனின் வெற்றியைத் தடுக்கவேண்டும் என்று பிரான்சின் பெரும்பாலான கட்சிகளும், தொழிற்சங்கங்களும், மனிதவுரிமை அமைப்புக்களும் அறைகூவல் விடுத்துள்ளன.

பிரான்ஸ் குடியரசு , மானுடம் உயர்வுற வழங்கிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் உன்னதப் பெறுமானங்கள், இனவாதக் கட்சியின் வேட்பாளரான மரின் லூ பெனால் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளன.

Related posts: