தமிழர் ஒருவருக்கு மலேசியாவில் அமைச்சுப் பதவி!
Tuesday, May 29th, 2018
மலேசியாவின் கோலாலம்பூர் அமைச்சரவையில் தமிழரான எம். குலசேகரன் என்பவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மகாதிர் முகமது தலைமை அமைச்சரானார். இந்த நிலையில் ஐனநாயக போராட்டக் கட்சியை (டிஏபி) சேர்ந்த தமிழரானஎம்.குலசேகரன் என்பவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
61 வயதாகும் குலசேகரனுக்கு மனித வள ஆதாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் ஜனநாயக போராட்டக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக உள்ளார். இவரது தந்தை இறப்பர் தோட்டத்தொழிலாளி. குலசேகரன் ஈப்போ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
இந்தத் தொகுதி சீனர்கள் அதிகம் வாழும் தொகுதியாகும். 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் தலைமை அமைச்சர் மகாதிர் முகமது தலைமையிலான அமைச்சரவையில்இவர் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
Related posts:
அமெரிக்காவின் அதிரடி அறிக்கை
20 ஆண்டுகளின் பின் இந்தியப் பிரமுகர் வடகொரியாவில்!
கொரோனா பரவல் தொடர்பில் புதிய தகவல் - வுஹான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
|
|
|


