தமிழக உள்ளாட்சி தேர்தலை இரத்து செய்து சென்னை ஐக்கோர்ட் உத்தரவு!

Tuesday, October 4th, 2016

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இரு அரசாணைகள் பிறப்பித்தன. அதேபோல, சென்னை மாநகராட்சிகளும் அறிவிப்பாணை வெளியிட்டது.

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வில்லை என்றும் எஸ்.டி. பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கவில்லை என்றும் எனவே, இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்யவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிறப்பிப்பதாக இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (4) பிறப்பிப்பதாக நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கில் இன்று  நீதிபதி என்.கிருபாகரன்  உள்ளாட்சி தேர்தலை இரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார்..   அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.டிசம்பர் 30 ந்தேதிக்குள் உள்ள்ளாட்சி தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார். மேலும் தேர்தலுக்காக புதிய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். எனவும் உத்தரவிட்டு உள்ளார்.

 i3 copy

Related posts: