தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு – கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்!
Friday, September 29th, 2023
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டிற்கு இன்றுமுதல் அக்டோபர் 15 வரை விநாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.
இதனைக் கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 2000 தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு பெங்களூருவில் 144 தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் கர்நாடகாவிற்குள் நுழைய தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இரு மாநில எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


