தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. முயற்சி!
Wednesday, May 3rd, 2017
தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க முயற்சி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் சூழல் என்பது மிகவும் அச்சப்படக்கூடிய நிலையில் காணப்படுவதாக குறிப்பிட்ட திருமாவளவன் மதவாத சக்திகளிடம் இருந்தும் சாதியவாத சக்திகளிடம் இருந்தும் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒரு கட்சி வளர்ச்சி அடைய வேண்டும் என்று விரும்புவதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. பாரதிய ஜனதாவிற்கும் அந்த உரிமை உண்டு. ஆனால் தமிழ்நாடு என்பது கடந்த 50 ஆண்டு காலமாக சமூக நீதியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் மாநிலம். அதற்கு ஆபத்து ஏற்படு விடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டு உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
|
|
|


